விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்! உடல் நசுங்கி பலியான பரிதாபம்

Report Print Printha in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கார் மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சூளைமேடு வன்னியர் 2-வது தெருவை சேர்ந்தவர் துரைவேலன், அவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 7 வயதுள்ள பவித்ரா என்ற மகள் உள்ளார்.

நேற்று இரவு சிறுமி பவித்ரா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த புதிதாக திருமணம் ஆன டேனி என்பவர் அவரது மனைவி ப்ரீத்திக்கு கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்திருக்கிறார்.

காரை ஓட்டி பழகிய ப்ரீத்தி தெரியாமல் இயக்கியதில், கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பவித்ரா மீது மோதியதில் அவரின் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்தார்.

இதை அறிந்து அலறியடித்துக் கொண்டு வந்த சிறுமியின் பெற்றோர்கள், பவித்ராவை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து டேனி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தியிடம் பொலிஸார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்