பிரபல மூத்த தமிழ் திரைப்பட நடிகர் காலமானார்: முன்னணி நடிகர்கள் அஞ்சலி

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல மூத்த திரைப்பட நடிகர் வங்கயலா சத்யநாராயணா தனது 78-வது வயதில் காலமானார்.

தமிழ், தெலுங்கில் 180-க்கும் அதிகமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் வங்கயலா சத்யநாராயணா.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

சில மாதங்களாக சுவாசக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த சத்யநாராயணா அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் சத்யநாராயணாவின் உயிர் நேற்று பிரிந்தது.

அவரின் இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்திருப்பதுடன் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்