சிறுநீரை ஊற்றி மதுக்குடிக்க சொன்ன நண்பன்: நடந்த விபரீதம் சம்பவம்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவில் மதுக்குடிக்கும் போது தண்ணீர் இல்லாததால் சிறுநீரை ஊற்றிக் குடிக்கும்படி கூறிய நண்பரை தலையில் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் அச்யுத் சாவுபே(25). சைனீஸ் கடை நடத்தி வரும் இவரும், இவரது நண்பரான காவாசும் அங்குள்ள தொழிற்சாலை பகுதியில் சனிக்கிழமை இரவு ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

தொடர்ந்து 2 மணிவரை மது குடித்த அவர்களுக்கு போதை அதிகமாகியுள்ளது. அந்த நேரத்தில் காவாஸ் இன்னமும் ஒரு கிளாஸ் விஸ்கி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்போது விஸ்கியில் கலப்பதற்கு தண்ணீர் இல்லாததால் சிறுநீரை ஊற்றிக் குடிக்குமாறு சாவுபே கிண்டலாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காவாஸ் அங்கிருந்த கட்டையால் சாவுபே தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதைத் தடுக்கச் சென்ற விவேக் என்ற மற்ற நண்பரையும் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலே சாவுபே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச்சென்ற காவாஸை நாவ்காரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்