தமிழகத்தையே உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா
273Shares
273Shares
lankasrimarket.com

ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு பிப்ரவரி 19-ம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

சென்னையை சேர்ந்த சிறுமி ஹாசினி (7), கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தஷ்வந்த் (25) என்ற இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.

இதையடுத்து தஷ்வந்தை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஷ்வந்த் மீதான வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வரும் 19-ம் திகதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்