இந்தியாவில் குற்றப்பின்னணி கொண்ட முதல்வர்கள் பட்டியல்: முதலிடம் யாருக்கு?

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் செயல்பாடு, தேர்தல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் குறித்த பகுப்பாய்வுகளை மேற்கொண்டுவரும் ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR)’ என்ற தன்னார்வ அமைப்பானது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு தற்போது இந்தியாவின் 29 மாநில மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ஆட்சி புரிந்து வரும் முதல்வர்களின் சொத்து விவரங்கள் மற்றும் குற்றப்பின்னணி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 31 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களில் 35% பேர் மீது கிரிமினல் குற்றங்கள் உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 26% மாநில முதல்வர்கள் மீது கொலை, கொலை முயற்சி, ஏமாற்றுதல், போன்ற மிக தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதன்படி நாட்டிலேயே அதிக குற்ற வழக்குகள் கொண்ட முதல்வராக மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளார். இவர் மீது 22 வழக்குகள் உள்ளன.

குற்றப்பின்னணி கொண்ட முதல்வர்கள் பட்டியலில் 2வது இடத்தில் 11 வழக்குகள் கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவருக்கு அடுத்ததாக 3வது இடத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் உள்ளனர்.

இந்த அறிக்கையின்படி 20 மாநில முதல்வர்கள் மீது எந்த வித வழக்குகளும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்