மனைவியை கொன்ற கணவன்: சடலத்தை எரித்த நண்பர்.... திடுக்கிடும் காரணம்

Report Print Raju Raju in இந்தியா
1244Shares
1244Shares
lankasrimarket.com

இந்தியாவில் மனைவியை கொலை செய்து நண்பருடன் சேர்ந்து சடலத்தை எரித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவமானது கடந்த மாதம் 6-ம் திகதி நடந்த நிலையில் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த சந்திரகாந்த் (40) என்பவர் மதுபான பார் மற்றும் உணவகம் நடத்தி வருகிறார்.

இவரின் மனைவி அக்‌ஷதா (30) சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்தார்.

தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஜனவரி மாதம் 22-ஆம் திகதி சந்திரகாந்தை சந்திக்க வந்த அக்‌ஷிதாவின் தாய் ரேகா தனது மகள் சில வாரங்களாக தனக்கு போன் செய்யவில்லை எனவும், அவர் எங்குள்ளார் எனவும் கேட்டுள்ளார்.

அதற்கு, தன்னிடம் 50,000 பணம் வாங்கி கொண்டு அக்‌ஷிதா டெல்லி சென்றதாவும், பின்னர் தான் போன் செய்தால் அவர் எடுப்பதில்லை எனவும் கூறினார்.

பின்னர் அக்சிதாவை தேடியும் அவர் கிடைக்காததால் சந்திரகாந்த் மீது சந்தேகமடைந்த ரேகா இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் சந்திரகாந்திடம் நடத்திய விசாரணையில் அவர் தான் அக்‌ஷிதாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அக்‌ஷிதா தன்னை ஏமாற்றுவதாக வெகுநாட்களாகவே சந்திரகாந்துக்கு சந்தேகம் இருந்துள்ளது.

இதையடுத்து கடந்த 6-ஆம் திகதி கணவன், மனைவிக்குள் இது சம்மந்தமாக சண்டை ஏற்பட்ட நிலையில் கழுத்தை நெரித்து அக்சிதாவை சந்திகரகாந்த் கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது நண்பர் ராஜேந்திர சிங்கை அங்கு வரவழைத்த சந்திரகாந்த் மனைவி சடலத்தை அப்புறப்படுத்த கூறியுள்ளார். இதையடுத்து காரில் அக்சிதாவின் சடலத்தை வைத்த ராஜேந்திர சிங் தமிழ்நாடு எல்லையான ஓசூருக்கு வந்துள்ளார்.

பிறகு அங்குள்ள காட்டில் வைத்து அக்‌ஷிதாவின் சடலத்தை ராஜேந்திர சிங் எரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்