அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவை சேர்ந்த ஒருவர் 12 மில்லியன் திராம் (இந்திய மதிப்பில் 20 கோடிரூபாய்) வென்றார்.
கேரளாவை சேர்ந்த 42 வயதான ஹரிகிருஷ்ணன் நாயர், துபாயில் உள்ள பிரபல நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு மேலாளராக பணியாற்றி வருகிறார்.
2002ம் ஆண்டு துபாய் சென்ற ஹரி, அவ்வப்போது ஜாலிக்காக லாட்டரி டிக்கெட் வாங்குவது உண்டு.
அதே போல் கடந்த டிசம்பரில் விளையாட்டாக அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு 12 மில்லியன் திராம் (20 கோடி ரூபாய்) பரிசு விழுந்துள்ளது.
ஒரே நாளில் ஹரி பிரபல்யமாகிவிட்டார், பரிசு பெற்ற சந்தோஷம் ஒரு புறமிருக்க, நீண்ட காலத்திற்குப் பிறகு Ireland, USA, UAE போன்ற நாடுகளில் வசிக்கும் தனது நண்பர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அவரைத் தொடர்பு கொண்டது ஹரிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய தினம், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஹரிகிருஷ்ணனை தொலைபேசி அழைப்பு எழுப்பியது.
“ஹலோ ஹரி, வாழ்த்துக்கள், ஒரே நாளில் கோடீஸ்வரனாகி விட்டீர்கள்” என கூற முதலில் நண்பர்கள் விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்தாராம்.
தொடர்ச்சியாக அழைப்புகள் வரத் தொடங்கியபிறகுதான் அது உண்மை என்பது அவருக்குப் புரிந்ததாம்.
கிடைத்த பணத்தை தங்களது மகனின் படிப்புச்செலவுக்கும் தர்ம காரியங்களுக்கும் செலவு செய்ய விரும்புவதாகத் தெரிவிக்கும் ஹரி, தங்கள் ஓய்வு காலத் திட்டத்திற்கும் அதை பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.