எது நடந்தாலும் என் குடும்பமே காரணம்: வீடியோவை வெளியிட்டு தூக்கில் தொங்கிய பெண்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவில் பெண் காவலர் ஒருவரின் விருப்பத்தை மீறி அவர் குடும்பத்தார் திருமணம் செய்து வைத்த நிலையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் உள்ள ஓசியன் நகரை சேர்ந்தவர் சரோஜ் (25), பெண் காவலரான இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் காவலர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை தனது வீட்டு அறைக்கதவை மூடி கொண்ட சரோஜ் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து சரோஜை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சரோஜ் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தார்கள்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சரோஜ் கடந்த நவம்பரில் பேசி வெளியிட்ட சில வீடியோக்கள் தற்போது பொலிசார் கையில் கிடைத்துள்ளது.

அதில் ஒரு வீடியோவில் சரோஜ் கூறுகையில், நான் ஒருவரை காதலித்தேன், ஆனால் என் குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பாக இருந்தனர்.

என்னை அடித்து, மிரட்டி என் காதலருக்கு எதிராக புகார் அளிக்க வைத்தார்கள். வருங்காலத்தில் எனக்கு எதாவது நேர்ந்தால் என் குடும்பமே பொறுப்பு என பேசியுள்ளார்.

இதன்மூலம் சரோஜ் விருப்பத்துக்கு மாறாக அவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ள நிலையில் பொலிசார் வீடியோ ஆதாரத்தை வைத்து தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்