நண்பரின் மனைவி மற்றும் தங்கையை கூட்டு பலாத்காரம் செய்த நபர்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டில் சிறை நட்பால் நபரின் மனைவி மற்றும் தங்கையை நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சென்னையில் உள்ள சிறையில் கைதிகளாக ஒன்றாக இருந்துள்ளனர்.

இந்த நட்பு சிறைக்கு வெளியே வந்த பின்னர் தொடர வேண்டும் என நினைத்த இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்ததும் சந்தித்து பேசிக்கொண்டுள்ளனர். மேலும், இரு குடும்பங்களும் அறிமுகமாகி நட்பு பாராட்டி வந்துள்ளனர்.

மணிகண்டன் வீட்டில் அவர் மனைவி மற்றும் தங்கை வசித்து வந்த நிலையில் அவர் வெளியில் சென்றுள்ளார்.

அந்த நேரம் பார்த்து சதீஷ் தனது நான்கு நண்பர்களுடன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மணிகண்டனின் மனைவி மற்றும் தங்கையை ஐவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சதீஷ் உட்பட ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்