மனிதநேயத்தால் சிகரம் தொட்ட ஆட்டோ ஓட்டுநர்: ரூ.15 லட்சம் வழங்கினார்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

எவ்வித பலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவிக்கு நிகர் எதுவும் கிடையாது! இதற்கு மிகச்சிறந்த உதாரணமாய் விளங்குபவர் தான் கேரளாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்யன்.

பல ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாகனத்தில் சினிமா பிரபலங்களின் புகைப்படத்தை ஒட்டி வலம் வரும் நிலையில், இவர் மட்டும் குழந்தைகளின் போஸ்டர்களை ஒட்டுவது மட்டுமல்லாமல் அவர் ஈட்டும் வருமானத்தின் வாயிலாக, ஏழைக்குழந்தைகளுக்கு பல்வேறு உதவி நலன்களையும் செய்து வருகிறார்.

சத்யன் தனது தினசரி வருமானத்தில் ஒரு பகுதியை, குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக செலவழித்து வருகிறார்.

இதுவரை 15 லட்சம் வரை குழந்தைகளின் மருத்துவ நலன் கருதி உதவி புரிந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சத்யன் மேலும் கூறியதாவது, எனது ஆட்டோவில் ஏறும் பயணிகளின் முகபாவங்களை வைத்தே அவர்கள் துயரத்தில் இருக்கிறார்களா? அவர்களுக்கு பணம் தேவையா? என்று என்னால் புரிந்து கொள்ள இயலும்.

ஆகையால் என்னை போன்றவர்களின் உதவி அவர்களுக்கு மிகவும் முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்பதை உணர்கிறேன் என்று கூறுகிறார்.

தற்போது சத்யனின் இரு மகன்களும் நல்ல வேளைகளில் இருப்பதால், அவரால் Malappuram-ஐ சேர்ந்த 7 குழந்தைகளுக்கு 5.5 லட்ச ரூபாய் முதல் செலவழிக்க முடிகிறது என்றும் அன்பால் ஒரு சாம்ராஜ்ய கோட்டையை கட்டியுள்ளது போன்று இருக்கிறது என கூறுகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்