ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை: காதலால் வந்த வினை

Report Print Kabilan in இந்தியா
304Shares
304Shares
lankasrimarket.com

காதல் விவகாரத்தால் பெண்ணொருவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு சீதை எனும் மனைவியும், சொர்ணமாரி, பத்மா என்ற இரு மகள்களும் இருந்தனர்.

இவரின் மூத்த மகள் சொர்ணமாரி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார்.

அவர் தினமும் பேருந்தில் சங்குபுரத்திற்கு பயணம் செய்தபோது, பேருந்து நடத்துநர் வேலுச்சாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளாடைவில் இவர்கள் காதலர்களாகியுள்ளனர். அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், சொர்ணமாரி தனது குடும்பத்தினருடன் சங்குபுரம் கிராமத்திலேயே வாடகைக்கு குடியேறியுள்ளார்.

இந்நிலையில், சொர்ணமாரியின் தந்தை பழனி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, இருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

சொர்ணமாரி நான்கு மாத கர்ப்பமான நிலையில், வேலுச்சாமி அதனை கலைத்துள்ளார். அதன்பின்னர், திடீரென சென்னைக்குச் சென்ற வேலுச்சாமி, சொர்ணமாரியுடனான பேச்சுவார்த்தையை தவிர்த்துள்ளார்.

மேலும், திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். எனவே, மனமுடைந்த சொர்ணமாரி, தனது தாய் சீதை மற்றும் தங்கை பத்மா ஆகியோருடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.

சொர்ணமாரி தனது குடும்பத்தினரின் தற்கொலைக்கு, வேலுச்சாமி, மெர்சி, குமுதா, ராமச்சந்திரன் ஆகியோரே காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்