திட்டமிட்டு சதிசெய்து விட்டனர்: டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Gokulan Gokulan in இந்தியா
396Shares
396Shares
lankasrimarket.com

ஜெயலலிதா எங்களை நீக்க காரணமே ஓபிஎஸ், தங்கமணி மற்றும் டிஜிபி ராமானுஜம் தான் என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற டிடிவி தினகரனுக்கு இன்றும் அரசுக்கு எதிராக பேச முயன்றவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனைதொடர்ந்து வெளிநடப்பு செய்த தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பேட்டியளித்தார்.

தனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என குற்றம்சாட்டிய தினகரன், ஓபிஎஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா?

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் என்ன செய்கின்றனர்.

எங்களின் குடும்பத்தால் தான் ஓபிஎஸ் முதல்வரானார், ஓபிஎஸை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன், எங்கள் குடும்பம் இல்லாவிட்டால் ஓபிஎஸ் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களுக்கு எதிராக ஓபிஎஸ், தங்கமணி மற்றும் டிஜிபி ராமானுஜம் சதி செய்ததாகவும், 10 பேர் தொடர்ந்து ஒரே பொய்யை சொல்வதால் அதனை நம்பி ஜெயலலிதாவும் தங்களை நீக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்