தாய் கொலையில் எனக்கு தொடர்பில்லை: கொடூரன் தஷ்வந்த் பேட்டி

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தன்னுடைய தாய் கொலைக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என தஷ்வந்த் கூறியுள்ளான்.

சென்னையை சேர்ந்த சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான இளைஞர் தஷ்வந்த் ஜாமீனில் வெளியில் வந்து தனது தாய் சரளாவை கொன்று விட்டு தப்பியோடினான்.

இதையடுத்து மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை பொலிசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது, சிறுமி ஹாசினியை கொன்றதாக தஷ்வந்த் ஒப்புக்கொண்டான். மேலும், தனக்கு வழக்கறிஞர்கள் வேண்டாம் என்றும், தற்போதே தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தான்.

இருப்பினும் தஷ்வந்த் தரப்பு சார்பாக ஆஜராக வழக்கறிஞர் ராஜ்குமார் என்பவரை நியமித்த நீதிபதி வழக்கை 18-ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பேசிய தஷ்வந்த், தாய் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் தன்னை யாரோ சிக்க வைக்க நினைப்பதாகவும் கூறியுள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்