ஆர்.கே நகர் தேர்தலில் இவருக்கே வெற்றி: சர்வே முடிவுகள்

Report Print Raju Raju in இந்தியா
526Shares
526Shares
lankasrimarket.com

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடிப்பார் என்று தெரியவந்துள்ளது.

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இங்கு பன்முனை போட்டி நிலவி வரும் நிலையில் ஆளும் கட்சியான அதிமுக-வுக்கும், எதிர்கட்சியான திமுக-வுக்கும் தான் நேரடி போட்டி என்ற பேச்சு உள்ளது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்கள் ஆய்வு அமைப்பு நடத்தியுள்ள கருத்து கணிப்பில் சுயேட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தான் வெற்றி பெறுவார் என தெரியவந்துள்ளது.

இதன் முடிவுகள் வருமாறு,

டி.டி.வி. தினகரனுக்கு 35.5 சதவீதம், திமுக-வின் மருது கணேசுக்கு 28.5 சதவீதம், அதிமுக-வின் மதுசூதனனுக்கு 21.3 சதவீதம், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயத்துக்கு 4.6 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.

மற்ற வேட்பாளர்களுக்கு 0.5 சதவீதம், நோட்டாவுக்கு 4.2 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

சின்னத்தை பொருத்தவரையில் டி.டி.வி. தினகரனின் பிர‌ஷர் குக்கர் சின்னத்துக்கு 91.6 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலைக்கு 81.1 சதவீதம் பேரும், தி.மு.க.வின் உதயசூரியனுக்கு 77.8 சதவீதம் பேரும், சீமானின் நாம் தமிழர் கட்சியின் மெழுகுவர்த்திகள் சின்னத்துக்கு 14.2 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்