கடைசி நிமிடத்தில் நின்று போன திருமணம்: மணமகளின் துணிச்சல் முடிவு

Report Print Kabilan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

திருமண நாளில் ரூ.1 கோடி ரூபாய் வரதட்சணை கேட்டதால், மணப்பெண் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில், முதுநிலை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரஷி. இவருக்கும், உத்தர பிரதேச மாநிலம் மொராபாத் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சாகூம் மாதோக் என்பவருக்கும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திருமணம் நடைபெற இருந்தது.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்டபோது மணமகள் வீட்டார் சார்பில், கார், 50 கிராம் தங்க நாணயங்கள் மணமகனுக்கு வழங்கப்பட்டன.

இது தவிர, வரதட்சணை மற்றும் பிற ஏற்பாடுகளுக்காக ரூ.35 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு மணமகன் குடும்பத்தினர் திடீரென, கூடுதலாக ரூ.1 கோடி வரதட்சணையாக கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரஷியின் பெற்றோர், இது குறித்து ரஷியிடம் கூறியுள்ளனர். பின்னர், தொலைபேசியில் மணமகனிடம் ரஷி பேசியுள்ளார். ஆனால், அவர் பிடிவாதமாக இருந்ததால் அவரை திருமணம் செய்துகொள்ள ரஷி மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்த தகவல் மணமகளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. திருமணத்துக்கு மறுத்த ரஷியின் முடிவை விருந்தினர்கள் பாராட்டினர்.

மேலும், இதுதொடர்பாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நயாபுரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்