ஜெயலலிதா சோபன் பாபுவை மணந்திருக்க வேண்டும்.. நடந்தது என்ன? உண்மையை விளக்கும் ராமலஷ்மி

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சோபன் பாபுவை மணந்திருக்க வேண்டும், ஆனால் அப்படி நடக்கவில்லை என்று பிரபல தெலுங்கு எழுத்தாளர் ராமலஷ்மி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இறந்து ஒரு வருடங்கள் கடந்த நிலையில், அவர் இறப்பு இன்றளவும் மர்மமாகவே உள்ளது. இறந்து ஒரு வருடங்களை கடந்த போதும், அவர் குறித்து நம்ப முடியாத சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

யாரு என்றே தெரியாத ஒரு பெண், நான் தான் ஜெயலலிதாவின் மகன் என்கிறாள், மற்றொருவரோ ஜெயலலிதாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று கூறுகிறார், ஆனால் இதில் எது உண்மை என்பது தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் பிரபல தெலுங்கு எழுத்தாளரான ராமலஷ்மி ஜெயலலிதா குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தெலுங்கில் கோரண்டாகு திரைப்படத்தின் படப்பிடிப்பு அவரது இல்லத்தில் தான் நடந்தது. மதியத்துக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் கூட, அப்போது அங்கிருந்த அத்தனை பேரையும் மதிய உணவை தன் வீட்டிலேயே உண்டு செல்ல வேண்டும் என்று இனிமையாக வற்புறுத்தியவர்.

வற்புறுத்தியது மட்டுமின்றி தன் கையாலயே அனைவருக்கும் சமைத்து போட்டார், மிகவும் மென்மையானவர், அவரை பார்த்து கொண்டே இருக்கலாம்.

ஜெயலிதாவை சோபன் பாபு மணந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவே இல்லை. அதற்கு காரணம் விதி என்றே கூறலாம்.

ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் இடையில் ஒரு அழகான உறவு இருந்தது. சோபன் பாபுவின் மனைவியைப் பார்த்திருக்கிறீர்களா தோற்றத்தைப் பொருத்தமட்டில் அவருக்கும் சோபன்பாபுவுக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இருக்காது.

இருப்பினும் சோபன்பாபுவின் குருவின் மகள் அவர். தன் குருவால், பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாது என்பதன் காரணமாகவே அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஒருவேளை ஜெயலலிதா சோபன் பாபுவை திருமணம் செய்திருந்தால், ஜெயலலிதா சிறந்த மனைவியாக விளங்கியிருக்க கூடும், இருந்த போதிலும் அவர்கள் இருவரும் சோபன் பாபுவின் மனைவியை மதித்தார்கள், அவரை ஏமாற்ற இவர்களுக்கு விருப்பம் இல்லை, நேர்மையாகவே நடந்து கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்