உலகில் வாழும் நிஜ ஸ்பைடர் மேன் இவர் தான்: மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
175Shares
175Shares
lankasrimarket.com

உயரமான பாறைகளில் எளிதாக சில நொடிகளில் ஏறி நிஜ உலகில் வாழும் ஸ்பைடர் மேன் நான் தான் என ஒருவர் நிரூபித்து வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்திரதுர்க்கா கோட்டை புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும். இங்கு மிக உயரமான பாறைகள் மற்றும் சுவர்கள் அமைந்துள்ளன. இதில் ஜோதி ராஜ் (42) மிக எளிதாக தாவி குதித்து ஏறுகிறார்.

குறித்த சுற்றுலா தளத்துக்கு வரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜோதி லாவகமாக செய்யும் வித்தையை கைதட்டியும், விசில் அடித்தும் கொண்டாடுகிறார்கள்.

எவ்வளவு தட்டையான பகுதியாக இருந்தாலும் அதில் வெகு சுலபமாக ஏறுவது ஜோதியின் சிறப்பாகும்.

இவர் உயிரை பணயம் வைத்து செய்யும் காட்சிகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கின்றன

சிறு வயதில் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு மிக உயர்ந்த பாறையில் ஜோதி ஏறினார். ஆனால் தனது உயிரை விடாமல் அதில் ஏறுவதையே தனது வாழ்க்கையாக ஆக்கி கொண்டார்.

குரங்குகளை பார்த்து இதை கற்று கொண்டதாக ஜோதி கூறுகிறார்.

கடந்த 2013-ல் 830 அடி உயரம் கொண்ட பாறையில் எந்தவொரு உதவியும் இல்லாமல் ஜோதி ஏறியது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இது போல நாங்கள் செய்ததில்லை என ஜோதியின் தொழில்முறை போட்டியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்