பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டினாரா அதிமுக எம்.எல்.ஏ? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
89Shares
89Shares
lankasrimarket.com

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் பணம், மதுவை மக்களுக்கும் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கோவையில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. இதற்காக கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பல ஆயிரணக்கான தொண்டர்கள், மது மற்றும் பணத்திற்காக அழைத்து வரப்பட்டனர்.

இதற்கு முன்னதாக விழா முன்னேற்பாடுகள் பணிகள் கோவை சுல்தான்பேட்டையில் நடந்தது.

அப்போது தொண்டர்களை அழைத்து வரும் அரசு, தனியார் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் ஓட்டுனர்கள், கிளீனர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கனகராஜ் பணமும், மதுவும் கொடுத்தார்.

இது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள ஆட்களை சேர்ப்பதற்காக வழங்கப்பட்ட பணம் என கூறப்படுகிறது.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், விழாவுக்கு வந்த மக்களுக்கு உணவும், குடிநீரும்தான் வழங்கப்பட்டது.

தொண்டர்கள், பொதுமக்களை ஏற்றி வந்த பேருந்துகளின் டீசலுக்காக தான் பணம் வழங்கப்பட்டதே தவிர மது வழங்கபடவில்லை என கனகராஜ் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்