பிச்சைகாரர்களை காட்டிகொடுத்தால் பரிசுத்தொகை

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

ஐதராபாத் நகரில் வரும் 28 முதல் தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடக்கவிருப்பதால், இதில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப், மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்கள் வரவுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானா தலைநகரான ஐதராபாத்தில் பிச்சை எடுப்பவர்களால் அதிக பிரச்சனை ஏற்படுவதால் இரண்டு மாதங்களுக்கு பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 6000 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில், சாலைகளில் பிச்சைகாரர்களை பார்த்தால் பொலிசாருக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.500 தொகைவழங்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்