நண்பர்களால் புதைக்கப்பட்ட கல்லூரி மாணவன்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தஞ்சாவூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சரவணன்(18) கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் கடந்த 30 ஆம் திகதி காணாமல் போனதால் இவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

சரவணனை தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொலிசாருக்கு சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

சரவணன் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே பெண் தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாகவே, குடிபோதையில் நண்பர்களே சேர்ந்து சரவணனை கொலை செய்து விட்டு, வெண்ணாற்றங்கரையில் உடலை புதைத்ததும், விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சரவணனின் நண்பர்களான ஆனந்த், நந்தகுமார், சரவணன், அஜித், கிருஷ்ணன் ஆகிய 5 பேரை பொலிசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து சரவணனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும், பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்