சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது உண்மையே!

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டது உண்மையே என உயர்மட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் டிஐஜி ரூபா குற்றம் சுமத்தினார்.

இதனை சத்யநாராயணராவ் மறுத்த நிலையில், உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இக்குழு விசாரணை நடத்தியதில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மையே என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இத்தகவலை கர்நாடக காவல்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்