பாலூட்டிய பெண்ணை தூக்கிய பொலிஸ்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மும்பையில் பெண் ஒருவர் காருக்குள் வைத்து தனது குழந்தைக்குபாலுட்டிக்கொண்டிருந்தபோது சாலை விதிகளை மீறிவிட்டார் என்று அவரது கார்களை பொலிசார்கட்டி இழுத்து சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஜோதி மாலே என்ற பெண்மணி மகாராஷ்டிரா மாநிலம் மாலட் நகரின் எஸ்வி சாலை பகுதியில் தனது காரை நிறுத்தி வைத்து விட்டு பால் கொடுத்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த பொலிசார், காருக்குள் இருப்பவர்களை கண்டுகொள்ளாமல் கயிறு மூலம் கட்டி இழுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜோதி கூறியதாவது, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் என்னை காரை விட்டு இறங்க கூட சொல்லவில்லை.

எனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன் எனக்கூறியும் நிறுத்தவில்லை, அங்கு வேறு சில வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும் அதனை கண்டு கொள்ளவில்லை, எனது காரை மட்டும் இழுத்து சென்றனர்.

எனது காரை மட்டும் இழுத்து செல்லப்படுவதை பார்த்த பொது மக்கள் பொலிசாரை எச்சரித்த போதும், கண்டுகொள்ளவில்லை எனக்கூறினார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர், இது தற்போது அதிகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக மும்பை கூடுதல் போக்குவரத்து பொலிஸ் கமிஷனர் அமததேஷ் குமார் கூறுகையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்