மரித்துபோன மனிதநேயம்: சாலையில் உயிருக்கு போராடிய நபர்.. கண்டுகொள்ளாத மக்கள்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

சாலையில் மாரடைப்பால் நபர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த நிலையில் அங்கிருந்த மக்கள் யாருமே அவரை கண்டுகொள்ளாத செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

advertisement

அதில் சாலை ஓரத்தில் உள்ள பெஞ்சில் நபர் ஒருவர் உட்கார்ந்துள்ளார், அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட அப்படியே தரையில் விழுகிறார்.

குறித்த நபரின் அருகில் பலர் உட்கார்ந்திருந்தாலும் ஒருவர் கூட உதவ முன்வரவில்லை.

அந்தவழியே பலர் இருசக்கர வாகனத்தில் சென்ற போதிலும் ஒருவர் கூட வண்டியை நிறுத்தவில்லை.

உதவ தான் மனமில்லை என்றாலும், ஆம்புலன்ஸுக்கு கூட யாரும் தகவல் தரவில்லை. இதனிடையில் மாரடைப்பு ஏற்பட்ட நபர் வலியால் துடிதுடித்து பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்