லண்டனிலிருந்து சாமியாருக்கு லட்சம் லட்சமாக பணம் அனுப்பிய பெண்: ஏன் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் புலியூர் காட்டுசாகையை சேர்ந்த கலியமூர்த்தியின் மகள் ஜெயப்பிரியா (25). இவர் லண்டனில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயப்பிரியா சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் பெற்றோருடன் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஜெயப்பிரியா அங்கிருந்த ஆறுமுகம் என்ற அருள்வாக்கு சாமியாரை சந்தித்து தனது குடும்பத்தின் சிரமத்தையும், தனக்கு திருமணம் ஆகாமல் தள்ளிப் போவதை பற்றியும் கூறியுள்ளார்.

இதனால் ஆறுமுகம், ஜெயப்பிரியாவிடம் உங்களுக்கு தோஷம் உள்ளதால், நீங்கள் பரிகாரம் செய்தாக வேண்டும், அப்போது தான் சரியாகும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெயப்பிரியாவின் போன் நம்பரையும் வாங்கியுள்ளார். கோவிலுக்கு சென்று திரும்பிய பின்னர், ஜெயப்பிரியா லண்டன் சென்றுள்ளார்.

அப்போது அவரை தொடர்பு கொண்ட ஆறுமுகம் பரிகாரம் செய்ய இருப்பதால் தனது வங்கி கணக்கிற்கு 10 ஆயிரம் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.

அவர் மீது நம்பிக்கை கொண்ட ஜெயப்பிரியா உடனடியாக அவரது அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து மூன்று லட்சம், இரண்டு லட்சம் என மொத்தம் 12 லட்சம் வரை ஜெயப்பிரியா லண்டனில் இருந்து அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆறுமுகம் பணம் பறிப்பதையே குறிக்கோளாக இருக்கிறார் என்பதை அறிந்த ஜெயப்பிரியா, உடனடியாக ஆன் லைன் மூலம் கடலூர் மாவட்ட பொலிசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் அறுமுகத்திடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஜெயப்பிரியாவின் உறவின முடிவண்ணன் என்பவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில் தனது உறவினர் ஜெயப்பிரியாவிடம் அருள்வாக்கு சொல்லி வரும் ஆறுமுகம் பல தவணைகளில் வாங்கியிருக்கும் 12 லட்சம் பணத்தை கேட்க சென்றபோது ஆட்களை வைத்து மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

வழக்குபதிவு செய்த பொலிசார் ஆறுமுகத்தை தேடி வருவதாகவும், அவரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்