நிர்வாணமாக்கி பார்த்து சிரித்த பொலிசார்! கதறும் திருநங்கை

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்படி நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் தான் திருநங்கை கிரேஸ் பானு, இவரை சிறைக்காவலர்கள் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர் தனியார் இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இதுபோன்ற சம்பவம் இனியும் தொடரக்கூடாது என்பதால் கடந்த 7-ஆம் திகதி போராட்டம் நடத்தினோம்.

அப்போது அங்கு வந்த பொலிசார் எங்களைக் கைதுசெய்து, நள்ளிரவில் மேஜிஸ்டிரேட் முன்பு நிறுத்தினர். பின்னர் மேஜிஸ்டிரேட், எங்களை 15 நாட்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டார்.

பின்னர், புழல் சிறைக்கு பொலிசார் அழைத்துச் சென்ற போது, பெண் கைதிகள் அறையில் வைத்து சோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டும்' என்றும் கூறினர்.

நான், ஏன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்றும் நாங்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு இங்கு வரவில்லை. மக்களுக்கான போராட்டத்தை நடத்திவிட்டுத்தான் சிறைக்கு வந்துள்ளோம்.

அதற்கு ஏன் எங்களை நிர்வாணமாகச் சோதனை செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்பியதாக கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள் நீங்கள், திருநங்கையா என்பதற்கு அறுவை சிகிச்சை செய்தீர்களா என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் நான் ஏன் உங்கள் முன்பு நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று கேட்ட போது, பேச்சைக் காதில் வாங்காதவர்களாக அவர்கள் பிடிவாதமாக என் ஆடையைக் களையச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மிகுந்த வலியோடு, நிர்வாணமாக தலைகுனிந்து நின்றதாகவும், அதன் பின் தன்னை அலைக்கழித்த அவர்கள், தொற்றுநோயுள்ள கைதிகளை அடைத்துவைக்கும் இடமான தொற்றுத் தடைப்பிரிவில் அடைத்துவைத்ததாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்