சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்: காதலனே கொன்றது அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் அவரை கொடூரமாக கொன்ற காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் மியாபூரை சேர்ந்தவர் கிஷோர் ஜெயின், இவர் மகள் சாந்தினி (17).

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர் கடந்த இரு வருடங்களாக சாய் கிரண் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியில் சென்ற சாந்தினி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மடினகுடா பகுதியில் இருக்கும் மலை அடிவாரத்தில் சாந்தினியின் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவை ஆராய்ந்த போது சாந்தினியும், சாய் கிரணும் அங்குள்ள புதருக்குள் சென்றது பதிவாகியிருந்தது.

பின்னர், சாய் கிரணை பொலிசார் பிடித்து விசாரித்ததில் சாந்தினியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

சாந்தினியை காதலித்து வந்த சாய் கிரண் திடீரென அவரை விட்டு விலகிய நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள சாந்தினி வற்புறுத்தியுள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாந்தினியை அடித்த சாய்கிரண் மலையிலிருந்து அவரை கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.

பொலிசார் சாய் கிரணை கைது செய்து விசாரித்து வரும் வேளையில், கொலையாளி தன்னுடன் வேறு நபர்களை கூட்டு சேர்த்து கொண்டு சாந்தினியை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக கிஷோர் ஜெயின் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்