நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத்தை வைத்து தமிழக அரசு செய்த குளறுபடி

Report Print Deepthi Deepthi in இந்தியா
149Shares
149Shares
lankasrimarket.com

தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத்தை வெளியிட்டு குளறுபடி செய்துள்ளது.

தமிழக அரசு சார்பில் மக்களுக்கு குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஸ்மார்ட் கார்ட்டில் உறுப்பினர்களின் பெயர், முகவரி போன்றவற்றில் அதிக குளறுபடிகள் ஏற்படுகின்றன என மக்களால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஓமலூர் நகரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி சரோஜா தேவிக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அதில், சரோஜா புகைப்படத்திற்கு பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு வேறு புகைப்படம் அளித்தால், மாற்றி தருவதாகவும் அதுவரை இந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்துமாறும் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்