வீட்டை விட்டு ஓடி வர மறுத்த காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு

Report Print Santhan in இந்தியா
239Shares
239Shares
lankasrimarket.com

தமிழகத்தில் காதலி வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், காதலன் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள ராஜாங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா. இவரும் அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சரவணன், கல்பனாவை திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். இதனால் அவரை வீட்டை வெளியேறி வரும்படி கூறியுள்ளார்.

ஆனால் கல்பனா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பின் வயலுக்கு சென்ற கல்பனாவிடம் சரவணன் சென்று வீட்டை விட்டு வெளியேறி வந்து திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

கல்பனாவோ மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த சரவணன் தான் வைத்திருந்த அரிவாளால் அவரை கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் மிதந்த கல்பனாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க்ப்பட்டு வருகிறது.

இதனிடையே, வெட்டப்பட்ட கல்பனா இறந்துவிட்டதாக கருதிய சரவணன், தனது வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்