ஓபிஎஸ், இபிஎஸ் உருவபடங்களை காலணியால் அடித்து எரிப்பு

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

அதிமுக தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் உருவ படங்களை எரித்து தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவாளர்கள் ஆங்காங்கே முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் பெசன்ட் நகரில் உள்ள தினகரன் வீட்டருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் உருவபடங்களை காலணியால் போட்டு அடித்தனர்.

பின்னர், அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அந்த உருவபொம்மைகளை எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்