ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்..! உறுப்பினர்களின் கவலை

Report Print Deepthi Deepthi in இந்தியா
85Shares
85Shares
lankasrimarket.com

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்றும், பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் கவனித்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, வடை, மூன்று வகை சட்னி, பொங்கல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் அசைவ உணவு வழங்கப்படவில்லை, மாறாக சைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது.

வெஜிடபுள் பிரியாணி, சாதத்துடன் சாம்பார், ரசம், மோர், தயிர், வடை, பால் பாயசம், ஒரு அவியல், கேரட், பீன்ஸ் பொரியல், கிழங்கு வறுவல், அப்பளம், ஜாங்கரி, ஜஸ்க்ரீம், பாதாம் பால், வாழைப்பழம் ஆகியவைப் பரிமாறப்பட்டுள்ளன. இது, அசைவப் பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், அம்மா உயிரோடு இருந்தபோது நடந்த பொதுக்குழு விருந்தில் அசைவ உணவு பரிமாறப்படும். பிரியாணியில் அதிக அளவு மட்டன் கறி இருக்கும்.

அதோடு வஞ்சிர மீன் வறுவல் நாக்கில் எச்சில் ஊறவைக்கும். ஆனால், இந்தப் பொதுக்குழு சாப்பாடு திருப்பதிகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழு விருந்து முடிந்ததும் அ.தி.மு.க-வினர் அங்கிருந்து ஏ.சி பஸ் மூலம் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்தில் செல்லும்போதே சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு குறித்து விவாதம் நடந்துள்ளது.

அப்போது, சசிகலாவுக்கு எதிராகத்தான் பெரும்பாலானவர்கள் பேசியுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக முடிவெடுத்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களைச் ஸ்பெஷலாகக் கவனிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நட்சத்திர ஹோட்டல்களில் தயாராக உள்ளதாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்