கல்லூரி பேராசிரியராக பணியாற்றும் மனித கழிவுகளை அகற்றும் பெண்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்றும் குடும்பத்தில் பிறந்து தற்போது கல்லூரி பேராசிரியராக ஜொலிக்கிறார் கௌஷல் பன்வார்.

கௌஷல் பன்வார் பால்மிகி என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

advertisement

இந்த இனத்தை சேர்ந்தவர்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் இன்றளவும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கௌஷலுக்கு சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள ஆசை வந்தது.

பெண்கள் குறிப்பாக கீழ் சாதியினர் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள அதிக தடைகள், கௌஷலின் ஆசிரியரும் இதற்கு முட்டுக்கட்டை போட்டார்.

இருப்பினும் வகுப்பின் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு மாணவர்களின் கேளிக்கிண்டல்களுக்கு மத்தியில் கற்றுத் தேர்ந்தார் கௌஷல்.

வகுப்பில் படுசுட்டியாகவும், அறிவாளியாகவும் இருந்த கௌஷலுக்கு ஏராளமான தண்டனைகள் கிடைத்தன.

தொடர் முயற்சியின் பலனாக சமஸ்கிருத மொழியில் பிஎச்டி பெற்று டெல்லி மோதிலால் நேரு பல்கலைகழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் சாதிக் கொடுமைகள் ஒழியவில்லை, அது வேறொரு பரிமாணத்தில் மாறியுள்ளது என்கிறார் கௌஷல் பன்வார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்