என்னுடைய தங்கை அனிதா! நடிகர் விஜய் உருக்கம்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

நீட் தேர்வினால் மருத்துவர் கனவு நிறைவேறாத ஆசையினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கூறுகையில், எனது தங்கையின் இறப்பு எங்களை மிகவும் பாதித்துவிட்டது, வீடே மாயனமாகத்தான் உள்ளது.

நாங்கள் எதிர்பாராதநேரத்தில் விஜய் வந்தார், எங்களோடு ஒன்றாக தரையில் அமர்ந்து பேசத் தொடங்கினார்.

எனக்கும் தங்கை இருந்தாள், இறந்து விட்டாள், அனிதாவின் மரணம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நான் அறிவேன்.

அனிதாவை என் தங்கையாக பார்க்கிறேன், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், நான் செய்கிறேன் என ஆறுதல் அளித்தாக கூறியுள்ளார்.

மேலும் போன் நம்பர் ஒன்றை கொடுத்து அனிதாவின் தந்தை கையில் பணம் கொடுத்தாகவும், எவ்வளவு பணம் என்று யாருக்கும் தெரிய வேண்டாம் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்