சசிகலா நியமனம் ரத்து: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்ற தீர்மானங்கள்,

 • ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிகள் இணைந்ததற்கு பாராட்டு, இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிர்வரும் தேர்தலில் இரட்டை இலையுடன் ஓரணியில் போட்டியிட முடிவு
 • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பதவியில் நீடிப்பார்கள்
 • எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வரும் அரசுக்கு பாராட்டு
 • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அரசு அறிவித்ததற்கு நன்றி
 • வர்தா புயல் பாதிப்பின் போது மீட்பு பணிகளையும், வறட்சியின் போது நிவாரணப் பணிகளையும் சிறப்பாக செய்த தமிழக அரசுக்கு பாராட்டு
 • அதிமுக அரசை சிறப்பாக நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு பாராட்டு
 • ஜெயலலிதாவுக்கு பின்னர் அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, எனவே அவரே நிரந்த பொதுச்செயலாளர். எனவே அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் வி.கே.சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நியமனம் ரத்து செய்யப்படுகிறது
 • தற்காலிகமாக உருவாக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் பதவியும் ரத்து செய்யப்படுகிறது
 • கட்சியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் ஏதும் செல்லாது
 • தொண்டர்களின் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவியை ஏற்படுத்துவோம்
 • பொதுச்செயலாளர் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ்.க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 • கட்சி சட்ட விதிகளை மாற்றவோ, திருத்தவோ, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான அதிகாரம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல் இணைப்பு: அதிமுக பொதுக்குழு தொடங்கியது

இன்று காலை 10.30 மணியளவில் பொதுக்குழு கூட்டம் தொடங்கவுள்ளதால் தொண்டர்கள் உட்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறிது நேரத்திற்கு முன்னதாக மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

இந்த பொதுக்குழுவில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் உள்ளிட்டவையும் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்