திருமணமான அடுத்தநாளே காப்பாற்றுங்கள் என கதறிய புதுப்பெண்: நடந்த விபரீதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

திருமணமான அடுத்தநாளே காப்பாற்றுங்கள் என கதறிய புதுப்பெண்: நடந்த விபரீதம்

திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயத்திற்கு ஆளாகியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவனுக்கும், வைஷ்ணவிக்கும் நேற்று தான் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு அடுத்தநாள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர்.

சாமி கும்பிட்டு முடித்த பின்னர், சிறுநீர் கழிப்பதற்காக அங்கிருந்த ஒதுக்குப்புறமான இடத்திற்கு வைஷ்ணவி சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக வேதகிரி மலை பகுதியில் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு பாறைகளின் மேல் படிந்து கிடந்தது. மேலும் சரிந்து கிடந்த மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதை கவனிக்காத வைஷ்ணவி அங்கு சிறுநீர் கழித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் சுதாரித்துக்கொண்ட அவர் அங்கிருந்து ஓடி வர முயற்சிக்கையில் மலையில் இருந்து 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

அப்போது அவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டுக்கொண்டே கீழ் நோக்கி உருண்டு கொண்டிருந்தார்.

தன் கண்முன்னே நடந்த இந்த காட்சியை கண்டதும், அதிர்ச்சியில் உறைந்து போன இளங்கோவன் சத்தம் போட்டுக்கொண்டே வைஷ்ணவியை காப்பாற்ற ஓடினார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.

இளங்கோவனின் சத்தம் கேட்டு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தவர்களும் சம்பவ இடம் நோக்கி ஓடோடி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் 3 மணி நேரம் போராடி வைஷ்ணவியை மீட்டனர்.

கீழே விழுந்ததில் வைஷ்ணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்