சிறையின் சுவர்களை பார்த்து கதறும் பலாத்கார சாமியார்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹிம் சிங் சிறை வாழ்க்கையை தாங்கி கொள்ள முடியாமல் சிறையின் சுவற்றை பார்த்து கதறி அழுவதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சொகுசு பங்களாக்கள், விதவிதமான ஆடம்பர கார்களுடன் வலம் வந்த சாமியாருக்கு சிறிய அறையிலான சிறை வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை.

முதல் இரண்டு நாள் சிறை உணவு குர்மீத்திற்கு பிடிக்கவில்லை. தற்போது நிலைமையை உணர்ந்துள்ளார். சிறை அறையில் சுவற்றை பார்த்து கதறுகிறார், புலம்புகிறார்.

மேலும், சிறையில் உள்ள தோட்ட வேலையை பார்ப்பதற்கு மறுப்பு தெரிவித்ததோடு தனது வேலையை செய்ய ஆட்களை அமர்த்த வேண்டும் என கேட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்