தீவிரவாதிகளுடன் மோதல்: துப்பாக்கி சண்டையில் தமிழக வீரர் பலி

Report Print Arbin Arbin in இந்தியா
339Shares
339Shares
lankasrimarket.com

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உள்பட 2 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிப்பாய் இளையராஜா குறித்த தாக்குதலில் உயிரிழந்தார் என தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த மற்றொருவர் சிப்பாய் காவாய் வாமன், சோபியானில் நேற்று முதல் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது, இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள அவ்நீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர், இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 3 வீரர்கள் காயமடைந்தனர்.

மேலும், ஒரு தீவிரவாதியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்