அதிமுக பொதுச்செயலாளர் யார்? தம்பிதுரை ஓபன் டாக்

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து மக்களவை துணை சபாநாயகர் மற்றும் கரூர் எம்.பி.யுமான தம்பிதுரை பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் குறித்த முடிவை அக்கட்சியின் விதிபடியே முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டியில், அதிமுக பொது செயலாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வில் முழுமையான விலக்கு என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.

எந்த கட்சியையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது, அத்தகைய நிலையும் இல்லை, கட்சியில் பிளவு என்பது கிடையாது.

பிளவு என தேர்தல் ஆணையமும், நீதிமன்றம் கூறவில்லை, கருத்து வேறுபாடு காரணமாக சிலர் பிரிந்து செயல்படுகின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்