12 வயது சிறுவனுக்கு சாபம்? 12 அங்குலமுள்ள பெரிய கைகள்: ஒதுக்கிய கிராம மக்கள்

Report Print Santhan in இந்தியா
235Shares
235Shares
lankasrimarket.com

இந்தியாவில் 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோயினால் அவனது கை 12 அங்குலம் அளவிற்கு பெரியதாகியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இது சிறுவனுக்கு ஏற்பட்ட சாபம் என ஒதுக்கியுள்ளனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் Tarik. 12 வயதாகும் இச்சிறுவனுக்கு பிறக்கும் போதே அரியவகை நோயின் பாதிப்பினால் அவனது கைகள் சாதரணமாக மனிதனுக்கு இருப்பதை விட பெரிய கைகளாக இருந்துள்ளது.

இதனால் Tarik இது தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். அவரது தந்தை இறந்ததால் பணப்பிரச்சனை காரணமாக தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.

இதையடுத்து அவரது கைகள் தற்போது 12 அங்குலத்திற்கு பெரிய கைகளாக மாறியுள்ளது.

இதனால் அவர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார். இது குறித்து Tarik கூறுகையில், தன்னுடைய கைகள் பெரிய கைகளாக இருப்பதால், பள்ளிகளில் தான் மறுக்கப்படுவதாகவும், மாணவர்களிடையே ஒதுக்கிவைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

நான் ஒருபோதும் இதை குணப்படுத்த முடியாது என்று நம்பவில்லை, இந்த நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது எனவும், தன்னுடைய கைகள் பெரிய கைகளாக இருப்பதால், இது தனக்கு வந்த சாபம் எனவும், ஒரு சிலர் தன்னை பேய் என்று கூறுகின்றனர்.

உள்ளூர் கிராம வாசிகள் தன்னுடன் பேசுவதற்கு பயப்படுகின்றனர். ஒதுக்கி வைக்கின்றனர். நான் இந்த நிலைமையை அகற்ற விரும்புகிறேன்.

நான் ஒவ்வொரு நாட்களும் பள்ளிக்குச் சென்று சாதாரண குழந்தைகளைப் போல விளையாட வேண்டும் என்றும் குழந்தைகளைப் போலவே இருக்க வேண்டும் எனவும் தனக்கும் சாதாரண கைகள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், டாரிக் பிரச்சனை உண்மையில் எங்களுக்கு ஒரு மர்மம். இதற்கு முன்னர் இது போன்ற நோயாளியை இதுவரை பார்த்ததில்லை.

ஒரு சில சந்தர்ப்பங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் அவர்கள் யானைக் கால் நோயைக் கொண்டிருந்தார்கள், அவனுடைய நிலைக்கு இது ஒத்ததாக இருக்கிறது.

ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு, எதுவும் சாத்தியமில்லை. விஞ்ஞானத்தின் வயதில், ஏராளமான ஆராய்ச்சிகள் உள்ளன, எனவே எதுவும் சாத்தியமற்றது என கூறியுள்ளனர்.

டாரிக் நிலைமை குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், அவனது தந்தை உயிருடன் இருக்கும் வரை அவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது, அவரது தந்தை இறப்புக்கு பின்னர், தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை, உள்ளூர் மருத்துவர்கள் இதை சரி செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.

அதற்கு நன்கு வசதிகள் நிறைந்த மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்கு தங்களிடம் போதுமான பண வசதி இல்லாததால், தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளார்.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்