மாயமான என்ஜினீயரிங் மாணவி வழக்கில் திருப்பம்: 3 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமான உண்மை

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான என்ஜினீயரிங் மாணவி வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாகல்கோட்டை மாவட்டம் வித்யாகிரியில் வசித்து வந்த என்ஜினீயரிங் மாணவி ஷில்பா, கல்லூரிக்கு சென்றிருந்த நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது மகள் மாயமாகி உள்ளதாக நவநகர் பொலிசில் புகார் செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த பொலிசார் அலட்சியமாக செயல்பட்டதல், மாயமான தங்களது மகளை கண்டுப்பிடித்து தர உத்தரவிட வேண்டும் என உயிர்நீதிமன்ற கிளையில் ஷில்பாவின் பெற்றோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, மாயமான ஷில்பாவை கண்டுபிடித்து கொடுக்க பாகல்கோட்டை மாவட்ட பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த 3 ஆண்டு தீவிர விசாரணைக்கு பிறகு ஷில்பா மாயமான வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

காதலை ஏற்க மறுத்ததால் அவரை அவருடைய தாய்மாமன் மகேஷ் தனது நண்பர்களான ஜாவித், வாசுரெட்டி ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்து, பின்னர் அவரது உடலை கிருஷ்ணா ஆற்றில் வீசியது தெரியவந்தது. மேலும் கொலையை 3 பேரும் மறைத்ததும் தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து ஷில்பாவை கொலை செய்ததாக அவருடைய தாய்மாமன் மகேஷ், வாசு ரெட்டி ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஜாவித்தை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்