ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை விவரங்கள்! சீமான் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in இந்தியா
1593Shares
1593Shares
lankasrimarket.com

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் எவ்வளவு பணத்துக்கு சிகிச்சை அளித்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.

அரசின் பணத்தை எடுத்தே அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது என கூறிய அவர், அரசின் பணம் என்றால் அது மக்கள் பணம் தான்.

அப்படியிருக்கையில் மக்கள் பணத்தில் சிகிச்சையளித்து விட்டு ஏன் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை அப்பலோ மருத்துவமனையும் அதன் தலைவர் பிரதாப் ரெட்டியும் தர மறுக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

லண்டன் மருத்துவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என சிகிச்சையளித்ததற்கு பதில் உள்ளூர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்திருந்தாலே ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும் என சீமான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments