இந்த 2 வகை எண்ணெய்கள் போதுமே: எதற்காக தெரியுமா?

Report Print Printha in வீடு - தோட்டம்
231Shares
231Shares
lankasrimarket.com

கொசுக்களை அழிக்க பல்வேறு கெமிக்கல்கள் கலந்த கொசுவர்த்தி சுருள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அதிலிருந்து வரும் புகையால் கொசுக்கள் அழிந்தாலும், பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவது உண்மை. அத்தகைய எவ்வித பிரச்சனைகளுமே வராமல் நம் முன்னோர்கள் ஒரு இயற்கை வழியை கூறியுள்ளனர்.

கொசுக்களை விரட்டும் இயற்கை வழி

1 லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் 250 மில்லி சுத்தமான வேப்ப எண்ணெய் ஆகிய இரண்டு எண்ணெய்களை சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அறைகளிலும் 1 அகல் தீபத்தில் கலந்து வைத்த எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி பயன்படுத்தி தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பலன்கள்

மேல் கூறப்பட்டுள்ள எண்ணெய்களை பயன்படுத்தி நாம் உறங்கும் அறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கொசுக்கள் நம்மை நெருங்கவே செய்யாது.

அதோடு இது நம் உடலுக்கு மிகவும் உகந்தது. எவ்வித கேடுகளையும் விளைவிக்காது. நம் வீடு முழுவதும் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழியும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்