உடல் எடையை குறைக்க: இறாலின் வியப்பூட்டும் நன்மைகள்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
177Shares
177Shares
lankasrimarket.com

அசைவ உணவுகளில் கடல் உணவுகளுக்கு தனி மவுசு தான், மீன் தவிர இறால், நண்டுகளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.

ஒருமுறை இறாலை ருசி பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் ருசித்து சாப்பிடுவார்கள்.

இறாலில் அதிகளவு புரதமும், விட்டமின் டியும் உள்ளது, உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

இதிலுள்ள செலினியம் புற்றுநோய் வருவதை தடுக்கிறது, மேலும் இதில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிகளவில் உள்ளது, இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும்.

சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் பாதிப்புகளை நீக்கி இளமையை தக்கவைக்க உதவுகிறது, வாரம் இருமுறை சாப்பிட்டு வருவது நலம்.

மேலும் இதிலுள்ள ஹெபாரின் என்ற பொருள் கண்பார்வை சிதைவிலிருந்து பாதுகாக்கும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகின்றன.

விட்டமின் பி 12 மற்றும் இரும்புச்சத்து அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்தசோகை ஏற்படுவதை தடுக்கும்.

இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்துகின்றன, அயோடின் சத்து கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கச் செய்வதால், ஞாபக சக்தி, புரிதல் மற்றும் கவனம் போன்றவற்றில் முன்னேற்றம் தென்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்