30 வயது தாண்டி விட்ட ஆண்கள் இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்!

Report Print Trinity in ஆரோக்கியம்
180Shares
180Shares
lankasrimarket.com

30 வயதிற்கு மேலானபின்பு உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது இப்போதெல்லாம் கட்டாயமாகி விட்டது.

இருப்பினும் பெரும்பாலானோர் இந்த வயதில்தான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

செய்கின்ற வேலை காரணமாக பல ஆரோக்கிய குறைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே 30 வயதிற்கு மேலான ஆண்கள் தங்கள் உடல்நலத்திற்காக சில விடயங்களை தவிர்க்க வேண்டும் என்கிறது மருத்துவம்.

டயட் சோடா

இந்த வகை பானங்கள் உடல் அழற்சியை உண்டாக்குபவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் அதிகமாகும். மேலும் இந்த வகை பானங்கள் தைராய்டு வியாதிக்கும் காரணமாக அமைகின்றன.

சுகர் பிரீ உணவுகள்

சுகர் பிரீ உணவுகளில் சுகர் வேணுமானால் இல்லாமல் இருக்கலாம் . ஆனால் அதில் செயற்கை சுவையூட்டிகள் பல சேர்க்கப்பட்டுள்ளன. இவை உடலில் நச்சு பொருட்களை அதிகரித்து கல்லீரல் நோய்களை உருவாகும் என கூறப்படுகிறது.

கேன் சூப்

கேன் சூப் என்பது பதப்படுத்தப்பட்ட பொருட்களால் ஆனது. இதிலும் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் சோடியம் உப்பு வகைகள் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

பாப்கார்ன்

பலராலும் விரும்பப்படும் பாப்கார்ன் ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகமான அளவில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இதிலும் பல பிளேவர்கள் கிடைப்பதால் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படுகிறது. இதயநோயின் தாக்கம் இதன் மூலம் அதிகமாகலாம்.

சோயா சாஸ்

உப்பிற்கு மாற்று பொருளான சோயா சாஸில் சோடியம் அதிக அளவில் இருக்கிறது. ஆகவே இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஒரு ஸ்பூன் சோயா சாஸில் 879ம் சோடியம் இருப்பதால் இதனை உணவிலிருந்து தவிர்க்க வேண்டும்.

ஆகவே 30 வயதிற்கு மேலான ஆண்கள் மேற்கண்ட உணவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியமான எலும்புகளுக்கும் தசைகளுக்கும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்யவும்.

உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். புதிய அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளவும்.

நோயில்லா பெரு வாழ்வு என்பதை எல்லோராலும் வாழ்ந்து விட முடியாதுதான்.. நோய் வருமுன் காப்பதன் மூலம் இந்த வாழ்வை அனைவரும் வாழ முயற்சிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்