கொள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Report Print Kabilan in ஆரோக்கியம்
482Shares
482Shares
lankasrimarket.com

கொள்ளு-வில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனை சாப்பிடுவதால், உடல் உபாதைகளை தவிர்ப்பதோடு, உடலையும் வலிமைப்படுத்தவும் முடியும்.

உடம்பில் உள்ள ஊளைச் சதையை குறைக்கும் சக்தி, கொள்ளு-க்கு உள்ளது. மேலும், கொள்ளு-வை ஊறவைத்து, அந்த நீரைக் குடித்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.

மேலும், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றை கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுங்கை சரிபடுத்தவும் உதவும்.

கொள்ளுடன், அரசி கலந்து செய்யப்பட்ட கஞ்சியானது, பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

கொள்ளுவில் எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடிய சத்துக்கள் உள்ளது, எனவே தான் குதிரைகளுக்கு உணவாக கொள்ளு அளிக்கப்பட்டது.

கொள்ளு பருப்பை எப்படி எடுத்துக் கொள்ளும் முறை

கொள்ளு-வை ஊறவைக்கும் பொழுது, அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகமும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்பு, அந்த நீரை லேசாக காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

உடலுக்கு சூடு என்பதால், முதலில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்துவிட்டு, பிறகு வாரம் ஒருமுறை அல்லது வசதிக்கேற்ப சாப்பிடலாம்.

ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். மிளகு, சீரகம் சேர்த்த கொள்ளு ரசம் உடலுக்கு மிகவும் நல்லது.

கொள்ளை அரைத்து, பால் எடுத்து தண்ணீருக்குப் பதிலாக, அதனை சூப் வைத்து பருகலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்