உறங்கும் முன் எலுமிச்சை நீரை குடித்தால் என்னாகும்?

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
Cineulagam.com

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதை விட இரவு உறங்கும் முன் குடித்தால் பல்வேறு அற்புத நன்மைகளை பெறலாம்.

இரவு உணவு முடித்த பின் ஒரு மணி நேரம் கழித்து சூடான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்

  • இரவு நேர உறக்கம் என்பது சிலருக்கு பல காரணத்தினால் கெட்டுப்போகும். அத்தகையவர்கள் இரவில் எலுமிச்சை நீர் குடித்தால் நல்ல உறக்கம் உண்டாகும்.

  • உடலில் உள்ள செல்களை புத்துணர்வாக்கி தசைகள், எலும்புகள் மற்றும் ஹார்மோன் வளர்ச்சி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  • எலுமிச்சை பழத்தில் விட்டமின் C அதிகளவு நிறைந்திருக்கிறது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

  • நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து, நோய்த் தொற்றுக்களின் அபாயத்தை குறைக்கிறது.

  • நம் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்க செய்து உடலில் இருக்கும் செல்களின் செயல்பாட்டை சீராக்கி, உடல் சோர்வை போக்குகிறது.

  • இரவு தூங்குவதற்கு முன்னால் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதினால் செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

  • நம் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாவை உடலில் சேராமல் வெளியேற்றி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பு

அதிக சூடான நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிக்கக் கூடாது. அதில் சர்க்கரை சேர்க்காமல், தேவையெனில் 1/2 ஸ்பூன் தேனை சேர்க்கலாம்.

எலுமிச்சை சாற்றை ஒரு நாள் குளிர்ந்த நீரில், ஒரு நாள் வெதுவெதுப்பான நீரில் என்று மாற்றி மாற்றி கலந்து குடிக்கக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்