ஆப்பிள் பற்றி இந்த விடயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த ஆப்பிள் பழத்தில் நீர் - 85%, புரதம் - 0.3%, கொழுப்பு - 0.1%, மாவுப்பொருள் - 10%, தாது உப்புக்கள் - 0.4%, கால்சியம் - 0.01%, இரும்பு - 1.7%, விட்டமின் B - 40 யூனிட், பாஸ்பரஸ் - 0.02% ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இத்தகைய சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் பழத்தை பற்றி உங்களுக்கு தெரியாத பல விடயங்கள் இதோ,

ஆப்பிள் பற்றி தெரியாத விடயங்கள்?
  • நம் உடலில் அலர்ஜியை உண்டாக்கும் ஹிஸ்டமின் எனும் வேதிப்பொருளை கட்டுப்படுத்தும் க்வெர்செடின் (quercetin) என்ற பொருள் ஆப்பிளில் அதிகம் உள்ளது. இது அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது.
  • ஒற்றை தலைவலி மற்றும் முழங்கால் வலி ஏற்படும் போது, பச்சை ஆப்பிளை நுகர்ந்தால் குணமாகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
  • ஆப்பிள் பழத்தின் தோலில் செய்யப்படும் ஆப்பிள் லெதர் எனும் நொறுக்குத் தீனி, சத்துக்கள் நிறைந்தது. இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • பழுக்காமல் காயாக இருக்கும் பழங்களோடு, பழுத்த ஆப்பிள் பழத்தை சேர்த்து ஒரு பேப்பரில் சுற்றி வைத்தால் காயாக உள்ள பழங்கள் ஒரே நாளில் பழுத்து விடும்.
  • ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து அதில் தலைமுடியை கழுவினால் கூந்தலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வாய்ந்த ஷாம்புவின் ரசாயனங்கள் நீங்கி விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்