இஞ்சி டீ குடியுங்கள்: 5 மணிநேரத்தில் அதிசயங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

இவ்வாறு தாயாரித்த இஞ்சி டீயை குடித்த 5 மணி நேரத்தில் நம் உடலில் உண்டாகும் அதிசய மாற்றங்கள் இதோ,

இஞ்சி டீ குடித்த 3 மணி நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள்

இஞ்சி டீயை குடித்த பின், நம் வயிற்றில் ஒருவித எரிச்சலுணர்வை சந்திக்கக் கூடும்.

ஏனெனில் இஞ்சி நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி சுத்தம் செய்யும். அதனால் தான் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது.

அடுத்த 2 மணி நேரத்தில் உண்டாகும் மாற்றங்கள்

இஞ்சி டீ குடித்த அடுத்த 2 மணி நேரத்தில், இதுவரை நம் உடலில் இருந்த ஒருவித அழுத்தம் வெளியேற்றப்பட்டு, உடல் லேசானது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

இதர நன்மைகள்
  • இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் வராமல் தடுக்கப்படும்.
  • இஞ்சி நம் உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்