இந்த 7 உணவுகள் ஆண்களுக்கு மட்டும்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஆண்களின் வீரியம் அவர்களது இரத்த ஓட்டத்தில் தான் இருக்கிறது. புதிய இரத்த அணுக்கள் உடலில் உற்பத்தி ஆவது, இரத்த ஓட்டத்தின் அளவு தான் ஆண்மையை சீராக்கும்.

உடலில் புதிய இரத்த அணுக்கள் சீராக உற்பத்தி ஆனால் தான் உடல் வலிமை, ஆரோக்கியம், இதர உடல் உறுப்புகளின் செயற்திறன் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

advertisement

இதோ! இந்த 7 உணவுகள் உடலில் புதிய இரத்த அணுக்கள் அதிகரிக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க பெருமளவு உதவும்..

முருங்கை கீரை:

முருங்கை கீரையை பருப்பு, முட்டை சேர்த்து சமைத்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை:

ஒரு மாதம் உங்கள் மதிய உணவில் பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து வந்தால் உடலில் புதிய இரத்த அணுக்கள் அதிகரிப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

புதினா:

புதினா ஒருவகையில் மூலிகை உணவென்றும் கூறலாம். புதினாவை சுடுநீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் இரத்த அணுக்கள் அதிகரிக்கும், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தலாம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அரைக்கீரை:

அரைக்கீரையை காலை, மாலை என இருவேளை பருப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தி ஆகும்.

உலர் திராட்சை:

தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படும்.

advertisement

பப்பாளி:

தினமும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு. பிறகு ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் உடலில் இரத்தம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும்.

அத்திப்பழம்:

தினமும் இரண்டு அல்லது மூன்று அத்திப்பழம் உண்டு வந்தால். இரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஒரு டம்ளார் பாலுடன் சேர்த்து அத்திப்பழம் உண்டு வந்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்