இஞ்சியுடன் இதெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள்: அற்புத பலன்கள் இதோ

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

இஞ்சியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருந்தாலும் அதை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்களை பெறலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

இஞ்சியின் மருத்துவ பலன்கள்?
 • இஞ்சியின் சாற்றை பாலில் கலந்து சாப்பிட வர, வயிறு தொடர்பான நோய்கள் குணமாகுவதுடன், உடலின் எடை குறையும்.
 • இஞ்சியை துவையல் மற்றும் பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சோர்வு மற்றும் மார்பு வலி போன்றவை குணமாகும்.
 • இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்தம் மற்றும் கபம் நோய்கள் குணமாகும்.
 • இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதக் கோளாறுகள் நீங்கி பலம் உண்டாகும்.
 • இஞ்சியை புதினா இலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் மற்றும் வயிற்று உப்பிசம் போன்றவை சரியாகும்.
 • காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் குணமாகும்.
 • இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை 2 நாட்கள் சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.
 • இஞ்சி சாற்றோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் தொப்பை குறையும்.
 • இஞ்சி சாற்றில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பசி உணர்வு ஏற்படும்.
 • இஞ்சி, மிளகு ஆகிய இரண்டையும் அரைத்து சாப்பிட்டு வந்தால், அஜீரணம் ஏற்படாது.
 • இஞ்சியை வதக்கி அதில் தேன் மற்றும் நீர் விட்டு, கொதிக்க வைத்து அதை காலை, மாலை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
 • இஞ்சியை அரைத்து நீரில் கலந்து அதனுடன் துளசி இலை சாறை சேர்த்து ஒரு வாரம் சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை நீங்கும்.
 • இஞ்சி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
 • இஞ்சி சாற்றுடன் வெங்காயச் சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி அளவு குடித்து வர நீரிழிவு நோய் குறையும்.
 • இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு ஆகிய மூன்றையும் கலந்து ஒருவேளை 1/2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இரைப்பு, இருமல் போன்றவை குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்