அழகான இடையை பெறலாம்: வெறும் வயிற்றில் பச்சையாக இதை சாப்பிடுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். இது மட்டுமில்லாமல் மற்ற நன்மைகள் இதோ,

நன்மைகள்
  • காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, ரத்த சோகையை குணமாக்கும்.
  • ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.
  • அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளே வராது.
  • முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருக்கும்.
  • ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் சளிகள் முறிந்து வெளியேறும்.
  • கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்